இலங்கைக்கும் சவூதிக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலமடையும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு நல்லுறவுகள் மென்மேலும் பலமடையுமென கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் அசீஸ் அப்துல் ரஹ்மான் ஏ. அல்-ஜம்மாஸ் கூறியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தியின் பங்காளர் என்ற வகையில் நாடடில் பொருளாதர சமூக அபிவிருத்தி திட்டங்களுக்கு சவூதி அரேபியா தாராளமாக உதவி இருப்பதாகவும் தூதுவர் ஜம்மாஸ் தெரிவித்தார். சவூதி அரேபியாவின் 78 ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் தூதுவர் இவ்வாறு கூறியுள்ளார் அண்மைக்காலங்களில் இலங்கைக்கு சவூதி அரேபியா 8500 மில்லியன் ரூபா வரையிலான நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
0 comments :
Post a Comment