Sunday, October 26, 2008

உணவு தவிர்ந்த ஏனைய நிவாரணங்களையும் வன்னிக்கு அனுப்பவேண்டும். ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவிப்பு.


வன்னி மக்களுக்கு தேவையான உணவு தவிர்ந்த ஏனைய நிவாரணங்களையும் அனுப்பிவைக்குமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து, இதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தரப்பு தயாராகி வருகின்றது. வன்னிக்கு உணவு பாரஊர்திகள் அனுப்பப்படுகின்ற போதும் அங்கு மக்களுக்கு கூடாரங்கள், மற்றும் ஏனைய வசதிகள் உடனடித் தேவையயாக உள்ளது. எனவே அவற்றையும் அனுப்பி வைக்கவேண்டும் என பான்கீ முன் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். அண்மையில் வன்னிக்கு சென்று திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் குழுவொன்று வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலருக்கு தெரியப்படுத்தியதை அடுத்தே இந்த வேண்டுகோள் இலங்கை அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment