Monday, October 27, 2008

பொலிஸ் காவலில் இருந்தவர் சயனைட் உட்கொண்டு மரணம்.



வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இந் நபரிடம் இருந்து தற்கொலை அங்கிகள் உட்பட புலிகளின் பல இராணுவ உபகரணங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் தனது அந்தரங்க உடல் உறுப்பொன்றினுள் மறைத்து வைத்திருந்த சயனைட் வில்லையை உட்கொண்டு இந் நபர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment