அநுராதபுரம் கொரவப் பொத்தானை சேருநுவரக் காட்டுப் பகுதியில் நேற்றுக் காலை நான்கு சடலங்கள் காணப் படுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்காட்டுப் பகுதியில் சுமார் நாற்பது கிலோ மீற்றர் தொலைவில் அச்சடலங்கள் காணப்படுகின்றன என அப்பகுதிக்குச் சென்ற கிராம வாசிகள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து அக்காட்டுப் பகுதிக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விரைந்துள்ளனர். கடந்த வாரம் காட்டுக்குத் தேடுதல் நடத்தச் சென்ற ஊர்காவப்
படையினர் காணாமற் போயிருந்தனர். இச்சடலங்கள் அவர்களுடையவையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment