Tuesday, October 28, 2008

ஐ.நா காரியாலய வளாகத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகள் கண்டெடுப்பு.



ஐ.நா சபையின் ஐஒஎம் எப்படுகின்ற குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் மன்னார் காரியாலய வளாகத்தினுள் இரண்டு கைத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று காலை 10.00 மணியளவில் காரியாலய காவலாளர்கள் தமது வழமையான தேடுதல் பணிகளை காரியாலய வளாகத்தினுள் மேற்கொண்ட போது அங்குள்ள வெளிக்கதவின் நிலையினுள் மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகள் இரண்டும் அதற்கான 48 ரவைகளும் மிகவும் நுணுக்கமாக ஒழத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்விடயம் உடனடியாக பொலிசாருக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com