கருணாவை எம். பி. யாக்கிய பெருமை ஜனாதிபதியையே சாரும்
ஆயுதம் தாக்கிய ஒருவரை ஜனநாயக நீரோட்டத்துக்குள் அழைத்து எம்.பி.யாக்கிய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும் என அமைச்சர் அமீர் அலி சபையில் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீதான அருவருக்கத்தக்க தாக்குதல் போன்றதொரு சம்பவம் எதிர்காலத்தில் இடம் பெறாதிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் அமீர் அலி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் திங்கட்கிழமை அனுராதபுரத்தில் இடம் பெற்ற குண்டுத்தாக்குதலில் எமது நாட்டைக் காப்பாற்ற பாடுபட்ட இராணுவ அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 27பேர் கொல்லப்பட்டமை கவலையளிக்கின்றது. ஆயதம் ஏந்திய இன்னும் பலரை இந்த பாராளுமன்றம் அங்கீகரித்திருக்கின்றது. அந்த வகையிலேயே கருணா என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனும் இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்திருக்கின்றார். அவரது வருகையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாம் இருக்கின்றோம்.
0 comments :
Post a Comment