பஷில்-முகர்ஜி இன்று புதுடில்லியில் சந்திப்பு.
ஜனாதிபதியின் விசேட தூதுவராக புது டில்லி சென்றுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ இன்று புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இலங்கையின் இன்றைய நிலவரம் குறித்து பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் பஷில் ராஜபக்ஷ எம்பியுடன் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ரொமேஷ் ஜயசிங்கவும் கலந்து கொண்டார். இன்று இடம்பெற்ற பேச்சுக்களின் போது வன்னியில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் பேணப்படும் என பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment