Thursday, October 30, 2008

புலிகளின் அத்தனை சக்திகளையும் முறியடிக்க நாம் தயாராக உள்ளோம்.



போரை நிறுத்துமாறு இந்தியா வலியுறுத்தவில்லை என்கிறார் அமைச்சர். லக்ஷ்மன் யாப்பா.
புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள சக்தியை வெளி;க்காட்டியிருக்கின்றனர். இது அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. இதனையும் ஒழித்துக் கட்டிவிட நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழகத்தின் எழுச்சியானது இலங்கை மீதான அழுத்தத்தை அதிகரித்திரிந்தது. இந்திய அரசாங்கமும் இதனால் தர்மசங்கட நிலைக்கு ஆளானது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணுகுமுறையையும் தமிழ் மக்கள் மீதான அக்கறையினையும் இந்தியா புரிந்து கொண்டுள்ளது. கிழக்கின் ஜனநாயக நீரோட்டத்தை வடக்கிற்கும் வியாபிக்க வேண்டும். அங்குள்ள தமிழ் மக்களும் ஏனையவர்களைப் போல் ஜனநாயக நீரோட்டத்தின் மூலமான நிம்மதிவாழ்வை அனுபவிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் உறுதியாயிருக்கிறார்.

யுத்தம் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்பதை அரசாங்கம் நன்;குணர்ந்துள்ள போதும், ஜனநாய வாழ்விற்கு பயங்கரவாதம் ஒளித்துக்கட்டப்படவேண்டும் என்பதே இந்த யுத்தத்தின் நோக்கமாகும் என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார். இதனை அரசாங்கம் உறுதியாக செய்து முடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment