Sunday, October 19, 2008
முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு ஆணைக்குழு மூன்றாவது முறையாகவும் விசாரணை.
வட பகுதியின் முன்னாள் ஆளுனரும் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபருமான விக்டர் பெரேரா மூன்றாவது தடவையாக லஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மூன்றாம் திகதியும் பத்தாம் திகதியும் இவரிடம் சுமார் மூன்றரை மணி நேரமாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது. மூன்றாவது தடவையாக நேற்று முன்தினம் இவரிடம் சுமார் நான்கு மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது. அவரின் பதவிக் காலத்தில் ஊழல் மோசடிகள் நிகழ்ந்திருப்பதாக பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் லஞ்ச மோசடி ஒழிப்பு திணைக்களத்திற்கு செய்த முறைப்பாடு தொடர்பாகவே முன்னாள் பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக லஞ்ச மோசடி ஒழிப்பு திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேவைப்படின் விசாரணைக்காக அவர் மீண்டும் அழைக்கப்படலாம் என அந்த அதிகாரி குறிப்பிட்டார். வடமாகாணத்தின் ஆளுனராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இவர் தம்மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்து ஆளுனர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment