புலிகள் இரசாயனத் தாக்குதல்களை நடத்தினால் உடனடியாக எதிர் நடவடிக்கை எடுக்கப்படும். - அமைச்சர் நிமல்.
புலிகள் இரசாயனத் தாக்குதல்களை படையினர் மீது நடாத்துவார்களேயானால் அதற்குரிய எதிர் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பத்திரண நேற்றுப் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பத்திரண அமைச்சர் நிமாலிடம் வாய்மூல விடைக்கான கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். இக்கேள்விக்கு பதிலளிக்கும் போது மேலதிக கேள்வியொன்றாகவே மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார். அநுராதபுரம் மருத்துவமனையில் வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கில் முன்னகர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு சிகிச்சைகள் பெறுவதற்கு இன்றியமையாத இடமாக அநுராதபுர வைத்தியசாலை அமைந்துள்ளது. இருப்பினும் அங்கு சுமுக நிலைமை இல்லை. விடுதலைப் புலிகள் எவ்வேளையிலும் படையினர் மீது இரசாயனத் தாக்குதல்களை நடாத்தலாம் என்ற ஓர் அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் நடைபெறும் வேலை நிறுத்தம் தொடர்பில் அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்ற கேள்விக்கு புலிகள் அவ்வாறான இரசாயனத் தாக்குதல்களை நடாத்தினால் அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment