Friday, October 17, 2008

மூக்குடைபட்டார் முதலமைச்சர் பிள்ளையான்! உயர் நீதிமன்றம் தடையுத்தரவை நிராகரித்தது.



பிள்ளையானுக்கு சட்டரீதியாகக் கிடைத்த முதல் தோல்வி.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானினால் காத்தான்குடி நகரசபையின் தலைவர் யூ.எல்.எம்.முபீன் பதவியிலிருந்து இடைநிறுத்தப் பட்டமை சட்ட விரோதமானதென மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை முபீன் நகரசபைத் தலைவராக பதவி வகுக்க முடியும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதவான் திரு. பரமராஜா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். நகரசபைத் தலைவர் ஒருவரை பதவியிலிருந்து இடைநிறுத்த முன்னர் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரினால் விசாரணை செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுவிற்கு எதிராக பதில் மனுவொன்றைத் தாக்கல் செய்யுமாறு கிழக்கு மாகான முதலமைச்சர் பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி நகரசபைத் தலைவர் மூபீன் சார்பில் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் நிசார் காசியப்பர் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment