Saturday, October 18, 2008

சமயத் தலைவர்களுக்கான கூட்டம் இன்று அம்பாறையில்.

சகவாழ்வு மன்றத்தின் அம்பாறை மாவட்டக்கிளை இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மூவின சமயத் தலைவர்களுக்கான சகவாழ்வு கூட்டத்தினை நடத்துகின்றது. அம்பாறை சகவாழ்வு மன்றக் காரியாலயத்தில் மன்ற இணைப்பாளர் எம்.ஜ.இப்றாகிம் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுமென மனிதப் பாதுகாப்பு கள இணைப்பாளர் கு. ஜெயராஜ் தெரிவித்தார். மாவட்டத்திலுள்ள இந்து, இஸ்லாம், பௌத்த, கத்தோலிக்க சமயத்தலைவர்கள் இக்கூட்டத்திற்க்கு அழைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் சகவாழ்வு மன்ற ஏற்ப்பாட்டில் இயங்கும் சகவாழ்வுக் குழுக்கள் திறம்பட இயங்குவதற்க்கான ஆலோசனைகளை பெறுவதே இதன் நோக்கமாகும் நாளை செயற்க்குழுக் கூட்டம் இதேவேளை சகவாழ்வு மன்றத்தின் காரைதீவு சக வாழ்வுக் குழுவின் செயற்க் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்ப்பகல் 2.30 மணிக்கு காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment