Friday, October 3, 2008

த.ம.வி. புலிகளின் தலைவர் கருணா அம்மான் தனது தளபதிகளையும் பிரதேச பொறுப்பாளர்களையும் சந்தித்தார்.



நேற்று 02.10.2008 காலை 10 மணியளவில் வெலிக்கந்தையிலுள்ள ரிஎம்விபி காரியாலயத்தில் விஷேட கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் பங்கு கொண்ட அதன் தலைவர் கருணா அம்மான் போராளிகளிகள் எவ்வாறான சமூக சிந்தனை கொண்டவர்களாக வளரவேண்டும் அவர்கள் மீது தமிழ் சமூகம் சுமத்தியிருக்கின்ற சுமைகள் என்ன? அவற்றை எவ்வாறு போராளிகள் கையாள வேண்டும்? போராளிகள் மக்களை அணுகவேண்டிய வழி முறைகள், அவர்கள் எவ்வாறு எமது சமூகத்தில் உள்ள சகல தரப்பினரையும் கௌரவிக்க பழகிக்கொள்ள வேண்டும்? போராளிகள் சமூகத்தில் சிறந்த
ஓழுக்கசீலர்களாக தம்மை உருவாக்கி கொள்ள பின்பற்ற வேண்டியவை போன்ற அதி முக்கிய விடயங்களை அங்கு உபதேசித்தார். . அமைப்பின் சகல மட்டத்தினருடைய கருத்துக்களும் அனைத்து போராளிகளையும் சென்றடையும் முகமாக ஏற்பாடாகி இருந்த அந்நிகழ்வில் பல போராளிகளும் பொறுப்பாளர்களும் உரையாற்றினர். இக் கருத்தரங்கில் ரிஎம்விபி யின் தளபதிகளான ஜெயம், மார்க்கன், சின்னத்தம்பி, இனியபாரதி, ஜீவேந்திரன், ரஞ்சன், இளங்கீதன், வீரா, பிரதீப் மாஸ்ரர் ஆகியோர் உட்பட்ட பிரதேச பொறுப்பாளர்கள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






போராளி ஓருத்தரின் பேச்சை தலைவர் கருணா அம்மான் போராளிகளின் வரிசையில் அமர்ந்திருந்து செவி மடுக்கின்றார்.


கட்சியின் பிரதித் தலைவர் ஜெயம் தலைமையில் பிரத்தியேக கலந்துரையாடல்




..............................

No comments:

Post a Comment