கிளிநொச்சியில் படையின் - புலிகள் மோதல். ஜெயபுரம் பகுதி இராணுவத்தினர்வசம்.
கிளிநொச்சி மேற்கு ஜெயபுரம் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதலை அடுத்து அப்பகுதி முழுவதும் படையினரால் கைப்பற்றப்பட்டள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை முதல் இடம்பெற்றுள்ள இம்மோதலின் போது விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவப் பேச்சாளார் மேலும் கூறியதாவது, கிளிநொச்சி ஏ-32 வீதியில் இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவரும் இராணுவத்தின் 58 ஆவது படையணியினராலேயே இப்பகுதி முழுமையாக கைப்பற்றப்பட்டது. தற்போது அப்பகுதியில் படையினரால் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளை நாச்சிக்குடா பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நாச்சிக்குடா வடக்கு தெற்கு பகுதியில் தமது இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் படையினர் அப்பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர இன்னும் சில தூரங்களே பயணிக்கவேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment