பெண் கொஸ்தாபலுடன் சேஷ்டை, இளைஞர் கைது.
சிவில் உடையில் நின்ற இளம் பெண் பொலிஸ் காண்ஸ்டபிளுடன் சேஷ்டை புரிந்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதிவான் எம்.கே.ஏ.பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். வெலிகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இப்பெண் கான்ஸ்டபிள் பஸ் நிலையத்தில் நின்ற போது பலர் அங்கு பஸ்ஸிற்காக காத்திருந்தனர். குறித்த நபர் பொது இடத்தில் வைத்து அநாகரிகமாக சேட்டை புரிந்துள்ளார். இதைச் சகிக்க முடியாத அப்பெண் கான்ஸ்டபிள் கையடக்கத் தொலைபேசி மூலம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே அங்கு வந்த பொலிஸார் அவரைக்கைது செய்தனர். அதன் போதுதான் அவருக்கு அப்பெண் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதும் தெரியவந்துள்ளதுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பதட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment