வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பண மோசடிகளைச் செய்து ஏமாற்றிவரும் போலி முகவர்கள் தொடர்பாகத் தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளதையடுத்து, பல போலி முகவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். கட்டுகஸ்தோட்ட பகுதியில் பல வருடங்களாக இயங்கி வந்த போலி முகவர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் பிடித்துள்ளனர். இவரிடமிருந்து பல கடவுச்சீட்டுக்கள், படங்கள், விண்ணங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இவர் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும், ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் வேலையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment