Tuesday, October 21, 2008
மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் ஸ்தலத்தில் பலி.
மொரட்டுவைப் பிரதேசத்தில் மதிலொன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மொரட்டுவை, மொரட்டுமுல்லவிலுள்ள சேமுவேல் ரொட்றிகோ மாவத்தையில் அமைந்துள்ள மர வேலைகள் செய்யும் இடத்தில் வேலைபார்த்துவந்த இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளான். உயிரிழந்தவர் சமீர சம்பத் அப்புஹாமி (வயது-20) என அடையாளம் காணப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இடி, மின்னலுடன் நேற்றிரவு பெய்த அடைமழை காரணமாக அவ்விடத்திலிருந்த மதிலொன்று உடைந்து விழுந்ததினாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது மூவர் அங்கு வேலைசெய்து கொண்டிருந்துள்ளனர். இவர்களுள் இருவர் தப்பிவிட்டதாகவும் ஒருவர் மாத்திரமே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விமானப்படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment