முல்லை, கிளிநொச்சிப் பகுதிகளில் நேற்றும் மோதல். புலிகளுக்கு பாரிய இழப்பு. பங்கர்களும் அழிக்கப்பட்டதாக ஊடக நிலையம் தகவல்
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு புலிகளின் பல பங்கர்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த மோதல்களின் போது புலிகளின் பல ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி அக்கராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் புலிகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது ரி- 56 ரக துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது. கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதோடு புலிகளின் இரு பங்கர்களும் அழிக்கப்பட்டுள்ளன. நாச்சிக்குடா பகுதியில் இரு இடங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது புலிகள் தரப்பில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வூடக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment