மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் பரிதாபமாக பலியாகியுள்ளான். குப்பிளான் தையற் கடவையை சேர்ந்த நாகமுத்து அரவிந்தன் அருள் (வயது 04) என்ற சிறுவனே பலியானவனாவான். நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின் பிளக்கில் கையை வைத்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளான். இதையடுத்து உறவினர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறக்க நேரிட்டுள்ளது.
0 comments :
Post a Comment