நகைக் கடை உரிமையாளர் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை
வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள நகைக் கடை உரிமையாளரொருவர் நேற்று பிற்பகல் கொள்ளையர்கள் மேற்கோண்ட துப்பாக்கிப் பிரியோகத்தில் கொல்லப் பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 1.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள விக்கினேஸ்வரா நகைக் கடையின் உரிமையாளரான நடராசா நேசராசா வயது 35 என்பவரே கொல்லப்பட்டவராவார். துவிச்சக்கர வண்டியில் வந்த ஆயுததாரியோருவரே இவர் மீது துப்பாக்கித் பிரயோகத்தினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளாரென பொலிஸ் ஊடாக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது கடையினுள் நுழைந்த இச் சந்தேக நபரை கடைத் தொழிலாளி ஒருவர் பிடிக்க முற்பட்டபோதே அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment