எல்ரிரிஈ மற்றும் ரிஎம்விபி உறுப்பினர்கள் அமெரிக்க செல்லத் தடை.
சிறுவர்களைப் படையில் சேர்த்தல், மற்றும் பலவந்த யுத்தத்தில் ஈடுபடுத்தல் போன்ற குற்றங்களை இழைப்போர் அமெரிக்கா நுழையும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படியான சட்டம் வடிவமைக்கப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.
இச்சட்டத்திற்கமைய இலங்கையில் உள்ள மேற்படி அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அமெரிக்கா செல்லமுடியாத நிலை ஏற்படும் என்பதுடன் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஈபிடிபி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் அமெரிக்க விசா விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டமைக்கான காரணம் மேற்படி சட்ட அமுலாக்கலாக இருக்க முடியுமென எதிர்பார்க்கப்டுகின்றது.
இச்சட்ட வரைபை ஏனைய மேற்கத்தைய நாடுகளும் தத்தமது நாடுகளில் அமுல்படுத்தலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
...............................
0 comments :
Post a Comment