Saturday, October 4, 2008

ஆட்கடத்தலில் ஈடுபட்ட மூவர் மன்னார் மாவட்டத்தில் கைது.

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் அண்மையில் முஸ்லிம் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்கள் நேற்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞ்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் வழக்கை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். நேற்றைய வழக்கு விசாரனையின் போது நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களும் நீதிமன்றில் கூடியிருந்தனர் என்று தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com