வாழைச்சேனை சந்தையில் கிளைமோர் குண்டு மீட்பு.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை பொதுச் சந்தைப் பிரதேசத்தில் நேற்று அதிகாலை 05 கிலோகிராம் எடைகொண்ட கிளைமோர் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பிரதேசத்தில் நேற்றுக் காலை வீதிச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினர் பொதுச்சந்தை பிரதேசத்தில் மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த இக்குண்டைக் கண்டு பிடித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படயிருந்த நிலையிலேயே இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இக்கிளைமோரை முற்பகல் 11.15 மணியளவில் செயலிழக்கச் செய்தனர். வாழைச்சேனைப் பொதுச் சந்தைப் பிரதேசம் தமிழ் முஸ்லிம் மக்கள் பலரும் ஒன்று கூடும் இடம் என்பதும் இங்கு குறிப்பித்தக்கது.
0 comments :
Post a Comment