வவுனியா சிதம்பரபுரத்திலும் ஆசிகுளம் வீதி கல்நாட்டினகுளம் சந்தியிலும் நேற்றுக் காலை இரண்டு இளைஞர்களின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் இந்தச் சடலங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சடலங்கள் இரண்டும் அடையாளம் காணப்படவில்லை. நேற்றிரவு 10.30.மணியளவில் வெள்ளை வான்
.. ஒன்றில் இந்த இளைஞர்கள் கொண்டு வரப்பட்டு சம்பவ இடத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது
No comments:
Post a Comment