உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்ட நாவலடி பிரதேச மக்களுக்கு இறால்குழியில் காணிகள் வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணம்.
மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள நாவலடி கிராம மக்களுக்கு இறால்குழி கிராம சேவகர் பிரிவில் காணிகள் வழங்கப்பட்டுளதுடன் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இறால்குழி கிராம சேவகர் பிரிவில் உள்ள கடற்கரையை அண்டிய நாவலடி பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்ட நிலையில் இம்மக்களுக்கான பதில் காணிகள் இறால் குழியில் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறாக வழங்கப்பட்டுள்ள காணிகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக இத்தாலி சுனாமி மீனவர் அபிவிருத்தி திட்டம் மூலமாக உரிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 26 குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் 7 கட்டங்களாக இந்நிதி வழங்கப்படுவதாக வீடமைப்பு அதிகார சபையின் பரிசோதகர் வி.எஸ். நற்குணம் தெரிவித்துள்ளார். இப்பணிகள் யாவும் மக்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பணிகள் நிறைவடையும் நிலையில் உரிய நிதிகள் பயனாளிகளின் வங்கியில் வைப்பிலிடப்படும் எனவும் பரிசோதகர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment