இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில் இன்று ஹர்த்தால்.
மட்டக்களப்பு நகரில் படையினரால் கைது செய்யப்பட இரு இளைஞர்கள் கடற்கரையில் சடங்கலமாக மீட்க்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் பொலிஸ் அதிபரும் படை உயர் அதிகாரிகளும் உரிய நடவெடிக்கையெடுக்க வேண்டும் எனக்கோரியும் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்கள் என்ற பெயரில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தின் ஊடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது;
03.10.2008 அன்று பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். அத்துடன் அடையாளம் காண முடியாத நிலையில் சடலங்கள் கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன, பாதுகாப்பு வழங்க வேண்டிய படையினரே இச் செயலுக்கு உடந்தையாக உள்ளனர். பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளும் இதற்கு பதில் கூறவேண்டும. ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கும் தமிழ் பேசும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் தடையாகவுள்ள படை உயர் அதிகாரிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிற்கு ஆதரவளிக்கும் கட்சிகளை கறி வேப்பிலையாக பாவிக்க வேண்டாம். அரசபடையே இந்த அமைதியான போராட்டத்தை சீர்குலைக்காதே! புலிப்பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழ் இனத்தை அழிக்கும் நடவடிக்கையை நிறுத்து! கிழக்கை மீட்பதற்கு உதவியவர்கள் எம்மவர்கள். தமிழ் இனத்தை தமிழ் பேசும் மக்களை பாதுகாப்பதற்கு வீரத்தோடு பேரம் பேசுங்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் தலைமையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டு மாநகரத்தில் செயற்ப்பட்டுக் கொண்டிருக்கும் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஆகியோர் ஜனாதிபதி மகிந்தராஜ பக்ஷவின் கரத்தை பலப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் எமது பிரதேசத்தில் தொடரும் அவலங்களைக் கண்டித்து நாளை நடை இருக்கும் ஹர்த்தாலுக்கு அனைத்து சமுகங்கங்களும் அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பாடசாலைகளும் ஆட்டோசங்கங்களும் வாகன சங்கங்களும் வர்த்தக சங்கங்களும் மற்றும் பொது மக்களும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என கேட்க்கப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment