வன்னியில் இடம்பெற்ற வான்தாக்குதல் ஒன்றைக் கண்டித்து நேற்று 30.10.2008 வவுனியா மன்னார் மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு எல்லாளன் படை எனும் தமது துணைப்படையின் பெயரில் புலிகள் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தனர். இவ் அழைப்பை மக்கள் முற்றாக நிராகரித்து தமது வழமையான செயல்களில் ஈடுபட்டதாகவும் புலிகளின் பொங்குதமிழ் மக்களுக்கு வாங்கிக் கொடுத்த கெட்ட
அனுபவங்களே இந்த நிராகரிப்புக்கு காரணம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். மேலும் இவ்விடயத்தில் தோல்வி கண்ட புலிகள் மக்கள் தம்மை நிராகரித்துள்ளதை மறுத்து வவுனியாவில் உள்ள புளொட் அமைப்பே மக்களை பகிஷ்கரிப்பில் ஈடுபடாது தடுத்தாக குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment