Monday, October 27, 2008

விவசாயிகளிடம் இலஞ்சம் பெற்ற அம்பாறை மாவட்ட காணி உதவி ஆணையாளர் கைது.

பதின்மூன்று ஏக்கர் காணியை ஐந்து விவசாயிகளுக்கு உரித்தாக்கித் தருவதாகக் கூறி இலஞ்சம் பெற்ற அம்பாறை மாவட்ட காணிஉதவி ஆணையாளர் இலஞ்ச ஊழல் அதிகாரிகளிடம் நேற்று (26.10.2008) கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளார். தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் ஐந்து விவசாயிகளிடம் இலஞ்சம் கோரிய காணி உதவி ஆணையாளர் பொத்துவிலில் வைத்து முன்பணம் பெற்றபோது அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார். பிரதம பொலிஸ் பரிசோதகர் லியனகே அவர்களின் தலைமையில் வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் உதவி காணி ஆணையாளர் ஜி.கே. ஜயசிங்கவை கைது செய்துள்ளார்கள். பொத்துவில் குஞ்சானோடை விவசாய பிரிவின் கீழுள்ள விளாஞ்சோலையில் 13 ஏக்கர் 2 ரூட் காணியை பொத்துவில் வாழ் ஐந்து விவசாயிகள் விவசாயம் செய்து பரிபாலித்து வந்தார்கள். இந்த காணியை ஐந்து பேருக்கும் உரித்தாக்குவதற்கே அவர் இலஞ்சம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment