அளுத்கம மொரகல்ல பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகே இடம்பெற்ற லொறி-வான் விபத்தில் லொறிச் சாரதி ஸ்தலத்திலேயே மரணமானதுடன் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயங்களுடன் நாகொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீரிகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான ஆர். சுசந்தமெண்டிஸ் என்பவரே விபத்தில் மரணமானவர். லொறியை சோதனை செய்து கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபில் தம்மிக்க காயங்களுக்குள்ளானார். மாத்தறையிலிருந்து
கொழும்பு நோக்கிச் சென்ற லொறியை பொலிஸார் சோதனை செய்து கொண்டிருந்த போது கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற வான் பாதையை விட்டு குடைசாய்ந்து லொறியுடன் மோதியுள்ளது.
No comments:
Post a Comment