பாராளுமன்றத்தில் பதப்பட்ட தமிழ் புலிக்குட்டி!
வல்லவனுக்கு வல்லவன் -அம்மான்
நல்லவனுக்கு நல்லவன்!
கருணாவின் கன்னிப் பயணம்
அரசியலின் அதிர்ச்சியாச்சு!
கருணா அம்மானின் கன்னிப்பேச்சோ
சுதந்திரத்தின் அடிக்கல்லாச்சு!
மரவுவழிப் படை நகர்த்திய
மறவழித் தமிழனவன்
அறிவுவழிப் பயணத்திலோ
அசத்தல் மன்னனும் அவனே!
அடக்குமுறை இருந்ததினால்
ஆயுதமேந்த தலைப்பட்டான்
இழுத்தடிக்கும் நாடகத்தால் -மக்கள்
இன்னல் கண்டு வெறுப்படைந்தான்!
எடுத்துரைத்த சந்தர்ப்பங்கள்
புறக்கணிக்கப்பட்டதனால்
இனத்தின் எதிர்கால நலன் கருதி
எதிர்ப்பதற்கே துணிந்து நின்றான்!
குழிபறிக்கும் கூட்டத்தின்
அடிமனதை நன்கு அறிந்ததனால்
அறிவு வழி உணர்ந்து சென்றே - மக்கள்
அரசியலை எட்டியவன்!
கபடமில்லை! கள்ளமில்லை!!
கவலையெல்லாம் தமிழர் மீதே!!!
தடைகள் கோடி எழுந்தாலும்
தளர்வறுத்து முகம் கொடுப்பான்!
தமிழருக்காய் குரல் கொடுத்து
அமைதியுடன் வாழ்வதற்கு
வழியமைக்க உறுதியுடன்
புறப்பட்டான் கருணா அம்மான்!
அவன் வழியை இறைவனவன்
துணையிருந்து வழிநடத்த
துதிக்கின்றோம் தமிழரென்றால் - அது
தமிழருக்காய் அம்மானே
அம்மானுக்காய் தமிழரிங்கே!
இருபத்திரெண்டு அங்கத்துவம்
தமிழருக்கு கிடைத்திருந்தும்
இழப்புகள் அதிகரித்தே
எம்மினம் தேய்ந்ததென்றால்
பிரபாகரனின் பாசிசத்தை
என்ன?.. ஏது?.. என்று?..
கேட்பதற்கு வலுவின்றி
துணையிருந்து ஆதரித்து
சூடு சுரணையற்ற
கைப்பொம்மைகளாய்ப் போனதாலே.!
இவ்வண்ணம்
சகாதேவன் VII
0 comments :
Post a Comment