தற்கொலை தாக்குதல் தற்கொலையாளியை அடையாளம் காணும் விசாரணைகள் துரிதம்
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தற்கொலை தாரியை அடையாளம் காண்பதற்கான புலன் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக வட மத்திய மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.பி. பத்திரன நேற்று தெரிவித்தார். இச் சம்பவத்தின் போது உயிரிழந்த ஊடகவியலாளர் ரஷ்மி மஹ்ரூபின் வீடியோ ஒளிப்பதிவு நாடாவையும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளவர்கள் அளித்துள்ள வாக்கு மூலங்களையும் அடிப்படையாக வைத்து இப் புலன் விசாரணைகள் துரிதப் படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இப் புலன் விசாரணைகளை இரண்டு பொலிஸ் குழுக்களும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தலைமையில் ஐ.தே.க. புதிய அலுவலகம் திறக்கப்படும் வைபவ இடத்தை எவ்வாறு சென்றடைந்தார்? அவரது நடமாட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இப் புலன்விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment