விடத்தல்தீவிற்கு அடுத்ததாக கடற்புலிகளின் செயற்பாடுகளுக்கு மிகவும் பலமான தளமாக விளங்கிய நாச்சிக்குடாப் பிரதேசம் நீண்ட சண்டையின் பின்பு இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவதரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளாங்குளத்திலிருந்து 8 கிமீ நீளமான புலிகளின் பலத்த பாதுகாப்பு அணை முற்றிலும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து தொடர்ந்து
முன்னேறிய படையினர் ஜெயபுரம் பகுதியையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர்.
No comments:
Post a Comment