ஜானக பெரேராவின் படுகொலை: உண்மையைத் திரிவுபடுத்த ஐ.தே.கட்சி முயற்சி.
ஜானக பெரேரா படுகொலை தொடர்பாக பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் ஐ.தே.கட்சியினர் அரசின் மீது குற்றம் சுமத்துகின்றனர். இச்குற்றச்சாட்டுக்களை நாம் நிராகரிக்கின்றோம். என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அநுராதபுரத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை ஐ.தே.கட்சி எம்.பி. ரங்கே பண்டார நேற்று சபையில் சமர்ப்பித்தார். இவ்விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். ஜானக பெரேராவை படுகொலை செய்தவர்கள் புலிகள்தான் என ஐ.தே.கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்கவும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் சிலர் அரசின் மீதே குற்றம் சுமத்துகின்றனர். ஐ.தே.கட்சி உண்மையைத் திரிவுபடுத்திக் கூற முயற்சிக்கின்றது. விசாரணைகளில் உரிய சாட்சியங்கள் பதியப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன என்றும் கூறினார். மரணமான சிரேஷ்ட இராணுவ வீரர் ஒருவரின் மரணத்தில் கூட சுய இலாபம் தேட ஐ.தே.கட்சி முயற்சி செய்கின்றது. இவ்வாறு செயற்பட வேண்டாம் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment