இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடாத்துவதைக் கண்டித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை கன்னியாகுமரியில்; மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மேலும் இலங்கையில் போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடாத்துவதைக் கண்டித்தும் கன்னியாக்குமரியில் நேற்று கண்டனப் பேரணி நடைபெற்றுள்ளது. இதில் இலங்கை அரசைக் கண்டித்து எழுதப்பட்ட சுலோக அட்டைகளுடன் மீனவர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்தப்பேரணியில் ஏராளமான மீனவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment