Tuesday, October 21, 2008

ஜே.வி.பி. எம்பிக்கள் கனடா பயணம்.



ஜே.வி.பி. யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவும், அக்கட்சி உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரனும் 10 நாட்கள் விஜயமாக கனடா சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கனடா நோக்கி புறப்பட்ட இவர்கள் இருவரும் அங்கு தங்கியிருக்கும் நாட்களில் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக, தமிழ் சிங்கள மாநாடொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், கனடாவிலுள்ள ஜே.வி.பி. யின் கிளைக் காரியாலய அங்கத்தவர்களையும் இந்த விஜயத்தின் போது ஜே.வி.பி. எம்பிக்கள் இருவரும் சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com