வன்னிக் களமுனை மோதலில் புலிகளுக்கு பெரும் இழப்பு.
வன்னிக் களமுனையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் புலிகள் தரப்புக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நாகர் கோயிலின் முன்னரங்க பாதுகாப்பு நிலை, கிளிநொச்சியில் அக்கராயன்குளம், கொட்டாவில், கல்மடு, வன்னேரிக்குளம், மணலாறு ஆண்டான்குளம் பகுதிகளில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த மோதல்களில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் சேதவிபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முல்லைத்தீவு கன்னிமுறிப்புக்குளம் பகுதியில் புலிகளின் பாதுகாப்பு நிலையொன்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மோதல்களையடுத்து, நடத்தப்பட்ட தேடுதல்களின் போது சுமார் 400 குண்டுகள், 4000 தோட்டாக்கள் என்பனவும் பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment