Friday, October 24, 2008

வன்னிப்பிரதேசத்தில் தொடர்ந்து மோதல், புலிகளின் பங்கர்கள் அழிப்பு, ஆயுதங்கள், மூன்று சடலங்கள் மீட்பு.

வன்னிப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் புலிகளின் பல பங்கர்கள் அழிக்கப்பட்டதோடு பல ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக தேசிய பாதுகப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது புலிகளின் மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இந்த மோதல்கள் இடம்பெற்றதாக ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் அமைந்துள்ள புலிகளின் பங்கரொன்று படையினரின் தாக்குதலில் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதனால் புலிகள் தரப்பில் சேதமேற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கொச்சிக்குளம் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் சடலமொன்றும் ரி- 56 ரகத் துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை அம்பாறை, பொத்துவில் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினருக்கும், புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் புலிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் இராணுவத்தினரின் சீரடையை ஒத்த சீருடையொன்றும் ரி-56 ரகத் துப்பாக்கி ரவைகள் 56, மெகசின் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment