Thursday, October 23, 2008

கருணா - விமல் வீரசன்ச இருவரும் விசேட சந்திப்பு.



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவுக்கும், ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஜே.என்.பி.யின் தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தால் மட்டுமே நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என கருணா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியத் தலையீடுகளுக்கு கடும் எதிர்ப்பு விடுக்கப்பட வேண்டும் எனவும், இலங்கைப் பிரச்சினைக்கு இந்தியா தலையீடு செய்யக்கூடாது எனவும் ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தமிழகத்தில் உருப்பெற்றுவரும் ஆதரவினை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிக முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இதன் ஓர் கட்டமாக, எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு எதிராக மட்டக்களப்பில் கருணாவின் ஆதரவாளர்கள் இன்று போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment