காத்தான்குடியில் கைக்குண்டு வீச்சு! (இரண்டாம் இணைப்பு)
காத்தான்குடிப் பிரதேசத்தில் உசேனியா வீதியிலுள்ள பள்ளிவாசலினுள் சற்று நிமிடங்களுக்கு முன்பு கைக்குண்டொன்று வீசப்பட்டதாகவும் அதில் ஐவர் காயமடைந்து வைத்தியசால கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 1990 ஆம் ஆண்டு இதே பள்ளிவாசலிலேயே தாக்குதல் நடாத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டும் இருந்தனர். நாளை மட்டுநகரில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெற ஏற்பாடாகியுள்ள இத்தருணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் புலிகளின் திட்டமிட்ட செயலென பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலதிக விபரங்கள் தொடரும்.
0 comments :
Post a Comment