Tuesday, October 21, 2008

புது டெல்லி அரசாங்கம் புலிகளுக்கு எந்தக்கால கட்டத்திலும் உதவாது. பிரதமர் காரியாலயம்.



இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார். அவருடைய பயணக்குழவில் செல்லும் பிரதமர் காரியாலயத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் விமானநிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் பேசுகையில்,
இந்திய பிரதமரான திரு. ராஜீவ்காந்தி அவர்களை படுகொலை செய்துவிட்டு இன்றுவரை அதற்காக மன்னிப்புகோராமல் இருக்கின்ற ஒர் பயங்கரவாத இயக்கத்திற்கு இந்திய அரசு எந்தக்கால கட்டத்திலும் உதவி புரியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் தழிழ் மக்களுக்கும் பயங்கரவாதிகளான புலிகளுக்கும் இடையில் ஓர் நீண்ட தெளிவான இடைவெளி உண்டு என்றும் தமிழ் மக்களின் மனித உரிமைகள் விடயத்திலும் அரசியல் தீர்வு விடயத்திலும் இந்திய அரசு பொறுப்புணர்ச்சியுடன் நடந்து அதற்கான அறிவுறுத்தல்களை சிறிலங்கா அரசுக்கு வழங்கும் என்றும் அங்குள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான சகல வேலைத்திட்டங்களிலும் இந்திய அரசு பங்களிப்பு செய்து வருவதாகவும் ஏற்கனவே ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கதினரால் வன்னிமக்களுக்கு எடுத்து செல்லப்டுகின்ற உணவு விடயத்திலும் இந்தியா தமது பங்களிப்பை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment