கல்லடியில் மீனவர் கூட்டுறவுச் சங்க சமாசக் கட்டிடம் திறப்பு.
மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு கல்லடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்க சமாசக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் விவசாய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் இரண்டு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடம் அண்மையில் திறந்துவைக்கபட்டது. இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர், கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment