Tuesday, October 21, 2008

இலங்கை பாதுகாப்புக் குழு இன்று பாகிஸ்தான் பயணம்.



பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு உயரதிகாரிகள் குழுவொன்று இன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானின் ஏ.பி.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் கம்ரன் ரசூலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அதேநேரம், இந்தக் குழு பாதுகாப்பு உயரதிகாரிகளையும் சந்திக்கவுள்ளது. இந்த வாரம் முழுவதும் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக பல்வேறு சந்திப்புக்களையும் நடத்துவர். ரஷ்ய விஜயத்தை முடித்துக்கொண்டே இந்தக் குழு பாகிஸ்தான் செல்கிறது.

No comments:

Post a Comment