Monday, October 20, 2008
வன்னேரிக்குளம் படையினர் வசம்.
ஆங்காங்கே சேற்றில் சிக்கும் ரக்டர் வண்டிகளை தள்ளி எடுத்துக் கொண்டு முன்னேறும் படையினர்.
பலத்த எதிர்புகளுக்கு மத்தியில் வன்னேரிக்குளம் பகுதியை இராணுவத்தினர் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பெரும் சண்டை மூண்டிருந்ததுடன் அப்பகுதியை விட்டு ஓடும் புலிகள் நஞ்சுகலந்த இரசாயனவாயு கொண்டு தாக்கியிருந்ததும் இராணுவத்தினர் அவற்றை சாமாளித்தவாறு வன்னேரிக்குளம் பகுதியை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.
சேற்றில் சிக்கியுள்ள பிக்கப் வண்டியொன்றை படையினர் தள்ளி வெளியேற்றுகின்றனர்.
வன்னேரிக்குளம், சின்னக்கொணலை, மண்ணியகுளம், குணச்சக்குளம் ஆகிய பகுதிகளே தற்போது படையினரின் கைகளில் வீழ்ந்துள்ளது. அங்கு பலம்வாய்ந்த மதில்களையும் கனரக வாகனங்கள் செல்ல முடியாதவாறு கிடங்குகளையும் அமைத்திருந்தும் இராணுவத்தினர் தமது இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றனர். நாச்சிக்குடா கடற்புலிகளின் தளம் முற்றிலும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment