பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி வைக்க புதுடில்லி தீர்மானம்.
இலங்கையில் மோதலை நிறுத்தி அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்திவரும் இந்தியா, நிலமையை நேரில் கண்டறிய வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப தீர்மானித்துள்ளது. இலங்கையில் வடபகுதியில் இராணுவத் தாக்குதலை இந்தியா அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந் நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமையன்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கை பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டதோடு, அப்பாவித் தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தினார். இதனை இந்தியப் பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தற்போதைய நிலைமையை நேரில் ஆய்வு செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிணாப் முகர்ஜி கொழும்பு விரைகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இலங்கைக்கு பயணமாவார் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment