Saturday, October 18, 2008

ஜனாதிபதி மகிந்த இந்திய பிரதமர் மன்மோகன் உடன் தொலைபேசியில் உரையாடல்.





நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை தொடர்பு கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச இலங்கை நிலவரங்கள் குறித்து விளக்கியுள்ளார். பிரதமருடன் உரையாடிய அவர் வடக்கில் இன்று புலிகளை நிராயுதபாணிகளாக்கி அவர்களை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான ஓர் இராணுவ நடவடிக்கை அங்கு இடம் பெறுவதாகவும் அந் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் விளைவிக்காமல் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நன்கு அறிவுறுத்தப்ட்டுள்ளதாகவும் அவற்றை கண்காணிப்பதற்காக இவ்விடயத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகள் அங்கு கடமையில் .அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தாம் இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு உள்ள கரிசினையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் இந்திய அரசினது ஆலோசனைகளைப் பரிசீலிக்க ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தை தொடர்பு கொண்ட இலங்கைக்கான வெளிவிகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு ஒர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அங்கு பலவிடயங்கள் கலந்துரையாடப்படும் என எதிர் பார்க்கப் படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com