பிள்ளையான், உதுமாலெவ்பை ஆகியோர் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதியுடன் கலந்துரையாடினர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டமடு வயல் வெளியில் கடந்த வியாழக்கிழமை 04 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பற்றி மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமா லெவ்வை அவர்களை தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம் பெறாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர். இதேவேளை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை ரி.எம்.வி.பீ.யின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதியைத் தொடர்பு கொண்டு இக் கொலைகள் நிகழ்ந்துள்ள விதம் குறித்து விரிவாக விளக்கியுள்ளதுடன் வட்டமடு விவசாயிகளின் பாதுகாப்புக் குறித்தும் எதிர் வரும் காலங்களில் மேற்கொள்ளப்படக் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைள் பற்றி கேட்டறிந்துள்ளார்.
0 comments :
Post a Comment