வடபகுதி மோதல்களின் போது புலிகளின் பல பங்கர்கள் அழிப்பு. பெருமளவு ஆயுதங்களும் மீட்பு.
வவுனியா, கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது புலிகளின் பல பங்கர்கள் அழிக்கப்பட்டதோடு பெருமளவு ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்துள்ளது. நேற்று (20) காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற இந்த மோதல்களின் போது புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வவுனியா விளக்கப்பட்டிக்குளம் பகுதியிலுள்ள புலிகளின் பங்கர் தொடர் மீது இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவு மேற்கொண்ட தாக்குதலில் பங்கர்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. வவுனியா தேக்கவத்தை பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் ஒரு கிலோகிராம் சீ-4ரக வெடிபொருட்கள், டெட்டனேற்றர்கள் இடுப்புப் பட்டிகள், 20 தொலைநோக்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியின் அக்கராயன்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 3 ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. வெலிஓயாவின் ஆண்டான்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 81 கன்னி வெடிகளும் மோட்டார் குண்டுகள் பொருத்தப்பட்ட ஆறு மரணப் பொறிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி மன்னியன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற தேடுதல்களின் போது 4 ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதே பிரதேசத்தில் புலிகளுக்கும் 58 ஆவது படைப்பிரிவுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் புலிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருகோணமலை வினிராசமலை பகுதி தேடுதலில் ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் 5 மெகசின்களும் 42 ரவைகளும் பயணப்பொதியொன்றும் மீட்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment