Thursday, October 23, 2008

கல்விப் பணிப்பாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் வலயக் கல்வி அலுவலகங்களில் தற்போது நிலவும் கல்விப் பணிப்பாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் பாட ரீதியான உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோருக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சைகள் திருகோணமலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன. குறிப்பட்ட பதவிகளில் கடமையாற்றிவரும் உத்தியோகத்தர்களும், தற்போதைய நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment