இராணுவக் கப்டன் ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
உடப்பில் உள்ள இராணுவ கஜபா ரெஜிமென்ட் முகாமில் கடமை புரியும் கப்டன் அசங்க ரட்நாயக்க கடத்தப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் 07 ம் திகதி ஒக்டோபர் மாதம் கம்பகா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். முகாமில் இருந்து முச்சக்கர வண்டியொன்றில் வீடு திரும்பும் வழியில் கம்பகா ஜக்கல வீதியிலுள்ள மடுகஸ்வலவ என்ற சந்தியில் வைத்து வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் இவர் கடத்தப்பட்டுள்ளதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளனர்.
கப்டன் அசங்க காணாமல் போவதற்கு முதல் நாள் அவர் உடப்பு பிரதேசத்தில் தேடுதல் ஒன்றை மேற்கொண்டு அங்கு ஒரு தொகை வெடி மருந்துகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் கப்டன் கடந்த 06ம் திகதியிலிருந்து கடமைக்கு திரும்பவில்லை என்பதையும் அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment