Thursday, October 16, 2008
நீதிமன்ற தீர்ப்பிற்கமைய அரசுக்கு உரித்தான எம்.பி பதவியை அரசு பெற்றுக்கொண்டுள்ளது ஜே.வி.பி யின் தர்க்கம் தேவையற்றது.
நீதிமன்றத் தீர்ப்பிற்கிணங்க அரசாங்கத்துக்கு உரித்தான எம்.பி. பதவியையே அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. ஜே.வி.பி.யினரின் தர்க்கம் தேவையற்றது என தகவல் ஊடாகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொண்றின் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் அரசாங்கம் இது விடையத்தில் முறையான தீர்மானத்தையே எடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார். ஜே.வி.பி.யின் வசந்த சமரசிங்க பதவி விலகியதையடுத்து அரசாங்கம் அப்பதவிக்கு அரசாங்கத்தின் சார்பில் விநாயகமூர்த்தி முரளிதரனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து நியமித்தது இதில் எவ்வித முரண்பாடுக்கும் தர்க்கத்துக்கும் இடமில்லை அப்பதவி அரசாங்கத்துக்கு உரித்தான பதவியே எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment